திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே பூத்தம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 4-ம் தேதி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த திவ்யா என்ற பெண்ணிடம் 5 தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி .இலக்கியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் டிஎஸ்பி தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திருமங்கலத்தை சேர்ந்த கோகுல்(24). மகேஸ்வரன்(23). 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து செயினை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.