திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் உசேல் தெருவை சேர்ந்தவர் காசிநாதன்.இவரது மனைவி கவுரி 65.இவர் வீட்டின் முன்பு வளர்ந்திருந்த செடியில் இருந்த பூக்களை பறித்து கொண்டிருந்தார்.
அப்போது, டூ வீலரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்,அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர்.இதுகுறித்து ஆரணி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.