கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் குற்றவாளி மேலும் பல குற்ற வழக்குகளில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் கல்லாவி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. தமிழரசி அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு, இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்த வழக்கின் நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.