திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலியர் வடக்கு தெரு, வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் கோமு செல்வி(38), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்பவர் கோமு செல்வியிடம் தகராறு செய்து, அவரை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்குள் அத்துமீறி சென்று, அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோமு செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.