பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடையே இன்று 04.10.2021-ம் தேதி பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மேலும் உங்கள் பகுதியில் ஏதேனும் குழந்தை திருமணம் நடைப்பெற்றால்.
அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண் 9498100690 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும், மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை