விழுப்புரம்: தமிழகம் முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உடற்தகுதி தேர்வு ஆறாவது நாளாக இன்று பெண்காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு விழுப்புரம் மாவட்டம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது
விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு. M.பாண்டியன் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இதில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எழுத்து தேர்வில் தேர்வாகி உடற்தகுதி தேர்வுக்கு பெண்கள் 700 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இதில் முதற்கட்டமாக இன்று 350 பெண்கள் மட்டும் உடற்தகுதி தேர்வு அனுமதியளிக்கப்பட்டது.