திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு. பாலகிருஷ்ணன், BVSc அவர்களின் உத்தரவின்படி இன்று 26.02.2022 காலை 0600 மணிக்கு காவல்துறையினர் சார்பாக “பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்” தாமலேரிமுத்தூர் மேம்பாலம் முதல் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சுமார் 13 கிலோமீட்டர் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மினி மாரத்தானில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 100 க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.