விழுப்புரம்: விழுப்புரம்மாவட்டம் காணை காவல் நிலையத்திற்குட்பட்ட செந்தமிழ் திருமண மண்டபத்தில்பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் (C WC) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது பற்றியும் , பெண்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை கையாலும் முறை குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண்கள் 181. மற்றும் 1098 தொடர்பு கொண்டு புகாரினை தெரிய படுத்தலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு .வெங்கடேசன்(CW C) ஆய்வாளர்கள் திரு. காமராஜ் (CWC) , திரு.குணசேகரன் (CWC). ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.