விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் (C WC) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் குறித்தும் , பெண்களுக்கு உடல் மற்றும் மன. ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை கையாலும் முறை குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு .வெங்கடேசன்(CW C) ஆய்வாளர்கள் திரு. காமராஜ் (CWC) , திரு.குணசேகரன் (CWC). மற்றும் திரு.ரத்தனசபாபதி (கண்டமங்கலம் Ps) ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.