பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் திரு.பாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தடுப்பு பிரிவு, அவரது குழுவினரான பெரம்பலூர் மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர், திரு.சுப்ரமணியன் உதவி ஆய்வாளர் திரு.ஜான், தலைமை காவலர்கள் திரு.மருதமுத்து & திருமதி.சுகன்யா ஆகியோர்கள் இன்று 08.08.2021ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும்,
அவற்றிலிருந்து எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையம் குறித்தும், அவற்றை தொடர்பு கொள்ள 181 & 112 கட்டணமில்லாத தொலைப்பேசி எண் குறித்தும்
விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எத்தகைய சட்டப்பிரிவு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை