திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையின் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (13.02.2025) நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.