பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின ்உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப, அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்களின் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நீதிராஜ், அவரது குழுவினரான அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா, காவல்நிலைய காவலர்கள் திருமதி.செல்வராணி மற்றும் திருமதி.புவனேஸ்வரி, ஆகியோர்கள் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையால்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பெண்கள் உதவி மையம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தும், பின்னர் பெண்கள் பாதுகாப்பு மையத்தின் கட்டணமில்லாத தொலைப்பேசி எண் 181 மற்றும் 112 குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முருக்கன்குடி கிராமத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை