பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணி்பாபளர் திரு.ச.மணி அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களை பாதுகாக்க பெண்கள் பாதுகாப்பு மையம் என தனியாக தொடங்கப்பட்டு அதனை தொடர்பு கொள்ள 181 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அறிமுகம் செய்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் 181 இலவச இணைப்பை தொடர்பு கொண்டு தன்னை தன் கணவர் குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் தனது கைக்குழந்தையை பிடிங்கி வைத்துக் கொண்டு கொடுக்க மறுப்பதாகவும் புகார் செய்தார்.
மேற்படி அழைப்பினை ஏற்ற பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணி்பபாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெண்கள் நல உதவிமைய உறுப்பினர்கள் மூலம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலுர் கிராமத்திற்கு விரைந்து சென்று புகாரளித்த பெண்ணை சந்தித்து அவரது குறைகளை கேட்டு அவரது கணவரை அழைத்து அவர்களுக்கு குடும்ப நல ஆலோசனை வழங்கி குழந்தையை தாயாரிடம் ஒப்படைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை