இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் , (CWC) அவர்களின் அறிவுரையின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.பாரதி (IUCAW) அவர்கள் தலைமையிலான போலீசார் இராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட L.F.C பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 மாணவிகள் மற்றும் 300 பெற்றோர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பற்றியும், போக்குவரத்து விழிப்புணர்வு பற்றியும் பெண்களுக்கான உதவி எண்-181 குழந்தைகளுக்கான உதவி எண்-1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.