கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவுப்படி கோவையில் பல்வேறு குற்றங்கள், இணைய குற்றங்கள், போன்றவை தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், இணைய மோசடி குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பல்வேறு இணைய குற்றங்கள் குறித்து அவர்கள் ஏன் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், சம்பவ அறிக்கை, 1930 சைபர் போர்டல் மற்றும் பிற சிக்கல்கள் தொடர்பான தலைப்புகள் குறித்து கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அருண், அவர்கள் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் 300 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்