திண்டுக்கல்: திண்டுக்கல் கிராமங்களில் விழிப்புணர்வு வாகனம் மூலம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சொர்ணலதா மற்றும் காவலர்கள் குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க181, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க1098 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு, துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது :பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். மொபைல் போனில் அவர் யாரிடம் பேசுகிறார் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு நல்லது கெட்டது என பெற்றோர் ,எடுத்துரைக்க வேண்டும், என்றார்.
