தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.இராஜாராம் த.கா.ப.,அவர்கள் அறிவுரையின் பேரில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக 122 அரசு பள்ளி மாணவர்களை ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்சி கோளரங்கம்,தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, உரக்கச்சொல் செயலி மற்றும் பெண்களுக்கான அவசர உதவி எண்கள் 1930,1098,181 ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பின் தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.இராஜாராம் த.கா.ப., மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப.,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மாணவிகள் மற்றும் ‘ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி நிகழச்சியானது சிறப்பாக முடிக்கப்பட்டது.