திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் மர்ம நபர்கள் நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி பெண்களிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
இது சம்பந்தமாக நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.வேல்மணி, திரு.கணேசன், திரு.பொன்குணசேகர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நூதன மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா