திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குற்றசம்பவங்களில் ஈடுபடும் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் வந்து தப்பி செல்லும் நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன பதிவெண்களையும், முகத்தையும் துல்லியமாக பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என பொன்னேரி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கல்பனாதத் கேட்டுக் கொண்டார்.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நடைபெறும் கொள்ளை வழிப்பறி சம்பவங்களை கண்டறிவது மட்டுமல்லாமல் கிராமங்களில் நடைபெறும் குற்ற செயல்களை கண்கானித்து விசாரணை மேற்கொள்வதற்கு வசதியாக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தி காவல்துறைக்கு பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் ஒத்துழைக்குமாறு காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.கல்பனாதத் வேண்டுகோள் விடுத்தார்.
ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி ஆய்வாளர் திரு.வெங்கடேசன், மீஞ்சூர் ஆய்வாளர் திரு.மதியழகன், உதவி ஆய்வாளர்கள் திரு.மாரிமுத்து, திரு.விஜயகுமார், திரு.சுப்பிரமணி, திரு.வெங்கடேசன் மற்றும் காவலர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்