காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்கதிர்பூரில் உள்ள நயாரா பெட்ரோல் பங்க்கில மணிகண்டன், சோமந்தாங்கல் கிராமம் என்பவர் பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
21.11.2021 அன்று இரவு 11.30 மணிக்கு மணிகண்டன் அவரது சக ஊழியர்களுடன் பணியில் இருந்தபோது குற்றவாளிகள் 1.சதிஷ் 23. எடைபாளையம் . ரெட்ஹீல்ஸ், சென்னை, 2 ) இமானுவேல் 18, கரையாஞ்சாவடி, பூந்தமல்லி, 3 ) பாலாஜிராஜா 19. கரையாஞ்சாவடி, பூந்தமல்லி, 4 ) பிரவின் 18. கரையாஞ்சாவடி, பூந்தமல்லி,
5 ) ஜெகன்ராஜ் 20. விருகம்பாக்கம், சென்னை, 6.மதியழகன் 18. குமணன்சாவடி சென்னை ஆகியோர் மேற்படி பெட்ரோல் பங்கிக்கிற்கு மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்து மணிகண்டனிடம் பெட்ரோல் கேட்டதாகவும், அதற்கு பெட்ரோல் ஸ்டாக் இல்லை என பதில் தெரிவித்தபோது.
குற்றவாளி சதிஷ் அவர் மறைத்துவைத்திருந்த கத்தியால் மணிகண்டனை தாக்கி அவரிடமிருந்து பணம் கேட்டபோது, பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் உறங்கிக்கொண்டிருந்த சக ஊழியர்கள் மேற்படி குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக காவல் துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றவுடன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இரவு ரோந்து காவலர் ஈடுபட்டதன் காரணமாக தப்பித்துச்சென்ற அனைத்து குற்றவாளிகளும் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டு
அவர்களிடமிருந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்த பாலுசெட்சத்திரம் காவலர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.