தேனி : கொடைக்கானலைச் சேர்ந்த ஆரிஃப் என்பவர் கேரள பதிவு எண் கொண்ட காரில் சர்வதேச சந்தையில் அதிக விலை மதிப்புள்ள பெட்டமைன் என்னும் போதை பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை கடத்திக்கொண்டு பெரியகுளம் வழியாக சென்று கொண்டிருக்கும் போது பெரியகுளம் வடகரை காவல்துறையினர் சோதனையில் சிக்கினார். துரிதமாக செயல்பட்ட பெரியகுளம் காவல்துறையினர் குற்றவாளியைத் தப்ப விடாமல் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளிகளான தேனி , ஈரோடு மற்றும் கோவைப் பகுதிகளை சேர்ந்தவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இக்குற்றத்தில் முக்கிய குற்றவாளிகளாக உள்ள கேரளாவைச் சேர்ந்த நபர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைந்து செயல்பட்ட பெரியகுளம் காவல்துறைக்கு பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி