கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் அமைந்துள்ளது. கர்நாடகா மாநில எல்லையில் கர்நாடகா ரக்ஷண வேதிகே அமைப்பினர் காலி குடங்களை எடுத்து தலையில் கற்களை சுமந்து திருப்பதி நாமம் அணிந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது எனக்கூறி சிவராம கவுடா . கர்னாடக பாதுகாப்பு மன்றம் சார்பில் தலைமையில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெங்களூர் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகினார்கள் அவசர ஆத்திரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லக்கூட வழியில்லாத இந்த நிலையில் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டது. கன்னட அமைப்புகளை சார்ந்த 80க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்