சேலம்: பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த 10லட்சம் மதிப்பிலான பான் குட்காவை கடத்திய 3பேர் கைது. கண்டைனர் லாரி மற்றும் சொகுசு காரை பறிமுதல் தீவட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை.. வாட்ஸ்அப் குழு அமைத்து தடை செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்தது அம்பலம்
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா பகுதி வழியாக தென்மாவட்டங்களுக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ் உத்தரவின்படி தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் திரு.ஆனந்தகுமார். சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.மூர்த்தி, திரு.பழனிச்சாமி, திரு.செல்வம் மற்றும் போலீசார் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கண்டைனர் லாரியில் ஊதுபத்தி பண்டல்களுக்கு இடையில் மூட்டை மூட்டையாக பான் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்டைனர் லாரி மற்றும் அதனுடன் வந்த காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
அப்பொழுது லாரியை பிடித்து விசாரித்த போது பெங்களூர் கொங்கேரி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணகவுடா என்பவரது மகன் கோபால் 38, அதே பகுதியைச் சேர்ந்த வாசு என்பவரின் மகன் கிரீஸ் 35 பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெரியப்பா என்பவரது மகன் மஞ்சுநாத் 37 ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர விசாரணையில் கடத்தல் லாரிக்கு முன்னாள் ஒரு சொகுசு காரில் இரண்டு பேர் சென்று காவல்துறையினர் உள்ளனரா என தகவலும் அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கண்டைனர் மற்றும் சொகுசு கார் உள்ளிட்ட சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்களை தீவட்டிபட்டி போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட மூன்று நபர்களை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பான் மற்றும் குட்கா பொருட்களை பயன்படுத்தும் நபர்களுக்கு ரகசியமாக தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் குழு அமைத்து பான் மற்றும் குட்கா பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது