கோவை : கோவை மாவட்டத்தில், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை அவினாசி சாலை நீலாம்பூர் தனியார் நட்சத்திர விடுதி அருகே சூலுர் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஆம்னி பேருந்தில் இருந்த மூட்டைகளில் சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பேருந்தில் இருந்த செந்தில்குமார் (47), மேகபூப்பாஷா(30), செந்தில்ராஜா(44), ஜெயப்பிரகாஷ்(36) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைதான 8 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் சிறப்பாக பணியாற்றி 2 டன் குட்கா, ரூ.20 லட்சம் பணம், வாகனங்களை பறிமுதல் செய்து, 8 பேரை கைது செய்த காவலர்களுக்கு, அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்