கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய திப்பேன் அக்ரஹார கிராம பகுதியில் சாந்தம்மா என்பவரின் வீட்டின் உள்ளே பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக கூறி அதை எடுக்கவில்லை என்றால் உயிர்பலி ஏற்பட நேரிடும் என பயமுறுத்தி சாமி சிலை எடுப்பதற்கு பூஜை ஏற்பாடுகள் செய்ய 80,000/-ரூபாய் பணம் வேண்டுமென குற்றவாளிகள் சொன்னதின் பேரில் சாந்தம்மா முன்பணமாக 60,000/- ஆயிரம் பணத்தை கொடுத்து 03.01.2022 ஆம் தேதி வீட்டினுள்ளே பூஜை செய்து குழி தோண்ட ஆரம்பித்தனர்.10 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய பிறகும் சிலை கிடைக்கவில்லை.
எங்கே என சாந்தம்மா கேட்டதற்கு குற்றவாளிகள் மீதி பணம் கொடுத்தால்தான் சிலை கிடைக்குமென கூறி இதைப்பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்று புதைத்து விடுவோம் என மிரட்டியதாக சாந்தம்மா 07.01.2022 ஆம் தேதி காலை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை செய்து ஐந்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.