திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, அன்மருதை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முனிரத்தினம், வயது 69 என்பவர் கடந்த 25.08.2021ஆம் தேதி தனது அண்ணன் பேத்தி திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டதாகவும், திருமணம் முடிந்து மறுநாள் 26.08.2021-ம் தேதி மாலை சென்னையிலிருந்து திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, இரும்பு பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனதாக அளித்த புகாரையடுத்து,
பெரணமல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.E.செந்தில் அவர்களின் தலைமையில், பெரணமல்லூர் காவல் ஆய்வாளர் திருமதி.N.கோமளவள்ளி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜெயபாலன், முதல்
நிலை காவலர்கள் திரு.விஜயகுமார், திரு.மோகன், திரு.தேசிங்கு, இரண்டாம் நிலை காவலர் திரு.குணசேகர் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில், அதே ஊரைச் சேர்ந்த வரதன் மகன் ராதாகிருஷ்ணன், வயது 39 என்பவர் வீட்டை உடைத்து திருடியது தெரியவந்தது.
அவரை கைது செய்து அவரிடமிருந்து 85 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்