சென்னை: நந்தனம், பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான குணசேகர், வ/35,என்பவர் கடந்த 16.05.2021 அன்று இரவு கொரோனா நிவாரண பணம் ரூ.7,36,000/- ஆயிரத்தை ரேஷன் கடையில் பூட்டி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
குணசேகர் மறுநாள் காலை வந்து பார்த்த போது ரேஷன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் ரூ.7,36,000/- திருடு போயுள்ளது தெரியவந்தது. இது குறித்து குணசேகர் J-1 சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கோபி (எ) ஊமை கோபி, வ/40,காஞ்சிபுரம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.4,45,000/- கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.