கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் தாலுகா ஆபிஸ் ரோட்டு பகுதியில் வசந்த் அண் கோ எதிரே மாஸ்டர் மொபைல் என்ற பெயரில் செல்போன் கடையை ஜாபர் உசேன் என்பவர் வைத்துள்ளதாகவும் (29.11.2022), ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டதாகவும் (30.11.2022) ஆம் தேதி காலை 06.00 மணிக்கு கடைக்கு அருகே உள்ள நபர் தன் கடையை உடைத்து திருடி உள்ளதாக தகவல் தெரிவிக்க தான் நேரில் சென்று பார்த்த போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த செல்போன்கள் திருடுபோய்விட்டதாக ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து செல்போன் திருடிய நபரை (08.12.2022) ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்