கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SV பாளையம் கிராமத்தில் தாமோதரன் மகன் அருள்ஜோதி என்பவர் வீட்டின் கதவை உடைத்து சுமார் 67 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 23,50,000/- பணம் களவாடபட்டதாக கொடுத்த புகார்மனுவைபெற்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இவ்வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா IPS அவர்கள் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துக்களை மீட்க திருக்கோவிலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.மனோஜ்குமார் அவர்களின் மேற்பார்வையில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் திரு.விநாயகமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.சிவச்சந்திரன், திரு.திருமால், திரு.ராஜசேகர், திரு.தனசேகர் மற்றும் காவலர்கள் கூடிய 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
நேற்று 05.03.2024-ந் தேதி காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை- சங்கராபுரம் சாலை கடுவனூர் கிராமம் பாக்கம் பிரிவு சாலை அருகில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரண்டு நபர்கள் காவலர்களை கண்டதும் தப்பியோடிய முயற்சித்த போது மடக்கி பிடித்து விசாரணை செய்த போது 1. மாரி (எ) மாரிமுத்து 30. 2. உதயா 24. ஆகிய இருவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியது தெரியவரவே இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2,19,000/- பணம் ஆகிய வழக்கு சொத்துக்களை கைப்பற்றி நீதிமன்ற அடைப்பு காவலுக்கு அனுப்பிவைத்தனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் இரண்டு நபர்களை தனிப்படைகள் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துக்களை மீட்டுவந்த திருக்கோவிலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
All reactions: