சென்னை: புழல் பகுதியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த ஜமில்பாட்ஷா என்பவர், புழல் காவல் சென்னை, புழல், கதிர்வேடு பகுதியில் வசிக்கும் அன்ஸ்ராஜ் (வ/58) என்பவர் அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 19.01.2022 அன்று அன்ஸ்ராஜ் அடகுகடைக்கு வந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜமில்பாட்ஷா என்பவர் 38.8 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்களை அடகு வைத்து பணம் ரூ.1,22,000/- வாங்கிச்சென்றுள்ளார். அடகு கடை உரிமையாளர் அன்ஸ்ராஜ் வளையல்களை சோதனை செய்த போது அது போலியானது என தெரியவந்துள்ளது. மேற்படி சம்பவம் குறித்து அன்ஸ்ராஜ் M-3 புழல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.குழுவினரால் கைது செய்யப்பட்டார்.M-3 புழல்காவல்நிலையகுற்றப்பிரிவுஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜமில்பாட்ஷா (வ/28) பெரம்பூர், என்பவரை 28.02.2022 அன்று கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், மேற்படி ஜமில்பாட்ஷாவுக்கு சதாம் என்பவர் தங்க முலாம் பூசப்பட்ட வளையல்களை தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.