தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னையாபுரம் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி(48) அவருக்கு சொந்தமான நாராயண பேரியிலுள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மிரட்டி பிடிங்கி இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டார்.. இதுகுறித்து முத்துலட்சுமி புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் திரு.காசி விஸ்வநாதன் அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்து வந்தார்.இந்நிலையில் முதல் நிலை காவலர்கள் திரு. விஜயபாண்டி திரு. சிவராமகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் திரு. முத்துக்குமார் மற்றும் திரு.மதியழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பார்த்ததில் திருட்டில் ஈடுபட்டது ராஜபாளையம் சம்மந்தாபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மயிலப்பன் என்பவரின் மகன் முருகன் (37) என்பது தெரியவந்தது.. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் முருகனை கைது செய்து புளியங்குடி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டார்.மேலும் முருகனிடமிருந்து திருடப்பட்ட நகை திரும்பப் பெறப்பட்டு அது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. நகையை பறித்துச் சென்ற முருகன் என்பவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்..
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்