கோவை : கோவை மாநகரத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் கொரானா தொற்று காரணமாக அரசு அமல்படுத்திய 144 ஊரடங்கால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ஓடிசா மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் அளித்து வந்தனர். மீண்டும் சில இரயில் போக்குவரத்து0 தொடங்கிய நிலையில், சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சார்மிக் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஓடிசா மாநில தொழிலாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் அவர்கள் உத்தரவின்படி, கோவை மாநகர காவல்துறையினர் உணவுப் பொருட்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்