ஆந்திரபிரதேசம்: ஆந்திரபிரதேசம்¸ விழிநகரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ராஜகுமாரி¸ இ.கா.ப அவர்கள் நள்ளிரவில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விசாரணை செய்ததில் தாங்கள் மூன்று நாட்களாக உணவின்றி நடந்து வருவதாக தெரிவித்தனர். உடனடியாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வீட்டில் எலுமிச்சை சாதம் சமைத்து புலம்பெயர்ந்த 11 பெண்களுக்கு வழங்கினார். காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டை பெற்று வருகிறது.