நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 210 பேர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் அவர்கள் அங்கிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு செல்கின்றனர் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விண்ணப்பித்தனர்.
67அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.பிரவீன்.பி நாயர்.இஆப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் கூட்டாக உரிய நடவடிக்கையின் பேரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக மயிலாடுதுறையிலிருந்து 128 நபர்களும் நாகப்பட்டினத்திலிருந்து 82 நபர்களும் ஏழு சிறப்பு பேருந்துகள் மூலமாக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர்.