கடலூர் : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. C. சைலேந்திரபாபு IPS அவர்களின் ஆணையின்படி, விழுப்புரம் காவல் சரகம், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவினை (Investigation Wing) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்தி கணேசன் IPS அவர்கள் துவக்கி வைத்தார். புலனாய்வு குழுவில் உதவி ஆய்வாளர்கள் திரு. செந்தில்குமார், திரு. ரவிச்சந்திரன், ஆகியோர் தலைமையில் 10 காவலர்கள் பணியாற்றுவார்கள். இப்பிரிவினர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதியப்படும் கொலை, ஆதாய கொலை, கூட்டு கொள்ளை, வழிப்பறி, சந்தேகமரணம், ஆள்கடத்தல், ஆயுதம், வெடிபொருள் சம்மந்தப்பட்ட வழக்குகள், ஜாதி மற்றும் மதம் மோதல்கள், இரண்டுக்கு மேற்பட்ட விபத்து மரணம், முக்கியமான அடிதடி காய வழக்குகள் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளை இப்பிரிவினர் புலனாய்வு மேற்கொள்வார்கள். காவல் நிலையங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் புலன் விசாரணை முடித்து உடனடியாக குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கரிகால் பாரிசங்கர், கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் திரு. குருமூர்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.