நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும்
ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி சர்வதேச புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் ஆண்டுதொறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2018-ம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கின் அடிப்படையில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியன். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் பேர் புற்றுநோயால் மரணமடைகின்றனர் என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் மாசுபாடுகளாலும் நமது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கவழக்கமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றே எச்சரிக்கைத் தெரிவிக்கிறது மருத்துவ உலகம்.
மோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபயாத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் பழங்களும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும். இதேபோல், புகையிலைப் பயன்பாடு மற்றும் மது அருந்துதல் புற்றுநோயை நம்மிடம் நாமே திணித்துக்கொள்வதற்கான வழி. இன்றைய இயந்திர உலகில் அளவுக்கு அதிகமான எடை பலவிதமான புற்றுநோய்களை வரவழைக்கிறது.எனவே
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் நிச்சயம் நம் நலனைக் காக்கும் என அறிவுரைக்கின்றனர் சர்வதேச மருத்துவர்கள் உலகம்