திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழாவும் நடைபெற்றது. இதில் 1500 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் மற்றும் கல்வெட்டு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டை அத்திப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன் சிறப்பாக செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்
அத்திப்பட்டு ஜி.ரவி தலைமை தாங்கி வழங்கினார். இந்தியன் ஆயில் எல்என்ஜி பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பழனிவேல், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேந்திரவர்மன், அத்திப்பட்டு மருத்துவ அலுவலர் சுரேஷ், காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் துராமன்,கொண்டக்கரை ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், மீஞ்சூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், வார்டு உறுப்பினர்கள், அத்திப்பட்டு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர்கள் சாம்ராஜ், சௌரிராஜன் நிகழ்ச்சி தொகுத்தனர். அத்திப்பட்டு குடியிருப்பு நல சங்க நிர்வாகி வழக்கறிஞர் இளவரசு நன்றி கூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு