மதுரை: மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னையின் ஆண்டு திருவிழா மே 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 19ம்தேதி நிறைவடைகிறது. 10ம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை அல்வாரஸ் செபாஸ்டின் திருவிழா கொடி ஏற்றி திருப்பலி நிறைவேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். தினமும் மாலை5.30 மணிக்கு ஜெபமாலை வழிபாடும் அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் தலைமையில் பாத்திமா அன்னையை பற்றிய பல்வேறு தலைப்புகளில் மறையுரையுடன் சிறப்பு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மே 18ஆம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து பாத்திமா அன்னை உருவம் தாங்கிய மின் அலங்காரத்தேர் பவனியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 19ம் தேதி மாலை சிறப்பு திருப்பலியுடன் கொடி இறக்கம்செய்யப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலய பங்குத்தந்தை ஜெயராஜ் தலைமையில் பாத்திமா நகர் பாத்திமா அன்னை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஆண்டனி வினோத்