திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப. அவர்களை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு உங்கள் குடும்பத்தினரையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், கடந்த வருடம் சிறப்பாக பணி செய்தது போல் இந்த வருடமும் சிறப்பாக பணி செய்திட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி அனைவருக்கும் இந்த வருடம் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் அமைய வேண்டும் என்று மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.