நாகப்பட்டினம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்துகள் இல்லாத புத்தாண்டாக கொண்டாடிட நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட காவல்.கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் கேட்டு கொண்டர்.
ஆங்கிலப் புத்தாண்டு தினம் வருகிற புதன்கிழமை 01.01.2020 உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதேபோல, அன்றைய தினம் நள்ளிரவு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி,வேதாரண்யம், பெறையார்,புதுப்பட்டினம்,நாகூர் அகிய பகுதிகளில் ஏராளமானோர் திரண்டு கொண்டாடங்களில் ஈடுபடுவர்.
அப்போது, எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து திட்டமிடபட்டுள்ளது மேலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது பாதுகாப்பான முறையில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக் கூடாது. மது அந்திவிட்டு இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவற்றை ஓட்டக் கூடாது.
கடலிலும், நீச்சல் குளங்களிலும் மது அருந்தியவர்கள் குளிக்கக் கூடாது. அறை எடுத்து தங்குவோர் குறித்த விவரங்களை முழுமையாகப் பெற வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுக்கு அறைகள் கொடுக்கக் கூடாது. சந்தேக நபர்கள் யாராவது அறைகளில் தங்கினால், அது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தனியார் சொகுசு விடுதி உரிமையாளர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார் மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான புத்தாண்டக அமைந்திட நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்து கொண்டார் மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யாரேனும் சீர்குலைக்கும் விதமாக நடந்து கொண்டால் உங்கள் புகார்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களில்
100,
9498100905,
8939602100,
7997700100,
04365242999,
04365248119,
24 க்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுகொண்டர்கள்.