ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் சார்பில் வருகின்ற, புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றை கண்காணிக்க காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் நெடுஞ்சாலையில் குற்றங்களை தடுக்க ரோந்து வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படும். புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படும்.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் தெரிவிக்கையில், கொண்டாட்டம் என்ற பெயரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வாகனம் ஓட்டுவது, இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களுடன் இருசக்கர வாகனங்களில் செல்வது போன்றவை விபத்துக்கு வழிவகுப்பது ஆகும்.
எனவே இவற்றை தவிர்த்து இளைஞர்கள் சந்தோஷமாக எந்தவித விபத்தும் இல்லா புத்தாண்டினை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இளைஞர்களின் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், பார்த்துக் கொள்ளுமாறும், கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேற்கூறியவற்றை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்