கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயக்கோட்டை To கெலமங்கலம் ரோட்டில் தின்னூர் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள பழைய சிவன் கோயில் பகுதியில் புதையல் மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இராயக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த குற்றவாளிகளை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் குற்றவாளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பழைய மண் பானையில் காந்தம் போன்ற பொருளை போட்டு அதை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்து விட்டு பின்பு அருள் வந்ததாக சொல்லி பொதுமக்களை ஏமாற்றி புதைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று புதையல் எடுப்பதாக சொல்லி எடுத்து அது பல லட்சம் மதிப்பு கொண்டது என்று சொல்லி பொதுமக்களை நம்ப வைத்து அதை விற்பனை செய்வதாக சொல்லி வாங்க முன் வருபவர்களிடம் பணம் எடுத்து வரச் சொல்லி பணத்தை பெற்றுக் கொண்டு புதையல் பொருட்களை கொடுப்பதற்கு முன்பு பணத்தையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஓடி விடுவதாக விசாரணையில் தெரிய வர குற்றவாளிகள் 8 நபர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் கிருஷ்ணகிரி பகுதிகளில் இவ்வாறு மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்