திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய வீரவநல்லூர் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் இயற்கை எழிலை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவதன் ஒரு பகுதியாக வீரவநல்லூர் காவல் நிலையத்தில் ‘மியோவாக்கி’ என்ற பெயரில் குருவிகள் வந்து தங்குவதற்கு ஏற்றவாறு கூடாரம் அமைத்து பறவைகள் தாகத்தை தணிக்க சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்துள்ளார்.
குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாக இரண்டு சைக்கிள் காவல் நிலையத்தில் வைத்து குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார்.
ஊனமுற்றோருக்கான சிறப்பு ஏற்பாடுகளையும், பொதுமக்கள் கண்டுகளிக்க மீன் தொட்டிகள், பூங்கா, தாகத்தைத் தணிக்க மண்பானை போன்ற செயல்களையும் செய்து வருகிறார்.
இது மட்டுமின்றி பறவைகள் தன் தாகத்தை தணிக்க காவல் நிலையத்திற்கு அருகில் ஒரு பெரிய தொட்டி வைத்து பறவைகள் வந்து தண்ணீர் அருந்த ஏற்பாடு செய்துள்ளார்.
இவர் நமக்கு நாமே என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதில் காவல் நிலையத்தில் சட்டை தொங்கவிடும் ஆங்கர் அதிக அளவில் வைத்துள்ளார். அதில் வசதி உள்ளோர் தங்களால் முடிந்த சட்டைகள் அதில் தொங்க விடுமாறும், வயதானவர்கள், தாய் தந்தை அற்றோர் அதை எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு யாராவது காவல் நிலையத்திற்கு வந்தார்கள் என்றால் துணிமணிகள் கொடுத்து, உணவளித்து செயல்பட்டு வருகிறார்.
இதுபோன்ற பல சமூக சிந்தனைகளில் மக்கள் சேவைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாம்சன் மற்றும் வீரவநல்லூர் காவல்துறையினர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல் ஆய்வாளர் திரு சாம்சன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி