சேலம் : சேலம் கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டம் பற்றிய விழிப்புணர்வு, உயர்கல்வி வழிகாட்டுதல், பெண்களுக்கான பாதுகாப்பு & அவசர உதவி எண்கள் மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் & தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இவ்விழாவிற்கு (பொறுப்பு) தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டம் குறித்து கெங்கவல்லி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராணி மற்றும் கெங்கவல்லி ஆசிரியர் பயிற்றுநர் அன்பரசு ஆகியோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் பற்றி தேவியாக்குறிச்சியில் உள்ள பாரதியார் கலை & அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராஜகுமாரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண்களுக்கான பாதுகாப்பு & அவசர உதவி எண்கள் மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் & தடுப்பு முறைகள் பற்றி கெங்கவல்லி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன், அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இறுதியாக பள்ளியில் முன்னதாக நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்