ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் மோனிகா, 18. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர் ஏர்வாடியில் தர்மராஜ் என்பவரை காதலித்தார். இது குறித்து ராமர் வீட்டிற்கு தெரிய வர, மோனிகாவை கண்டித்தனர்.
தர்மராஜை தான் திருமணம் செய்வேன் என மோனிகா பிடிவாதமாக இருந்தார். இந்நிலையில் மோனிகாவை, தர்மராஜ் பழஞ்சிறைக்கு அழைத்து சென்று அனைவரின சம்மதத்துடன் மே 28 ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், மோனிகா நேற்று முன் தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. அங்கு மோனிகாவின், கழுத்தில் கயறு இறுக்கிய தடயம் இருந்தது. மோனிகா இறப்பில் மர்மம் உள்ளதால் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மோனிகாவின் தாயார் பூமாதேவி கீழக்கரை போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி, கீழக்கரை போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிந்து, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுபாஷ் விசாரித்து வருகிறார்.