புதுக்கோட்டை: சமூக நீதி நாள் உறுதிமொழி அனுசரிக்கும் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள், மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
சமூக நீதி நாள் உறுதிமொழி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் கூர்மைப் பார்வையும் கொண்டதாக செயல்பாடுகள் அமையும்!
பகுத்தறிவுக் என்னுடைய சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன் ! மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும் !
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.