இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களால் கடந்த (28.09.2020) ” WE FOR YOU ” (நாங்கள் உங்களுக்காக) என்ற புதிய செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 262 மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களது இல்லங்களில் ரோந்து புத்தகம் (Patta Book) வைக்கப்பட்டு,காவல் நிலையங்களில் உள்ள ரோந்து காவலர்கள் தினமும் மூன்று முறை அவர்களின் வீட்டிற்குச் சென்று பட்டா புத்தகத்தில் கையொப்பமிட்டும், அந்த பட்டா புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள Qr-code ஐ ஸ்கேன் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை செய்யவும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் இவ்வமைப்பு உறுதுணையாக இருக்கும்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்