தென்காசியில்: தென்காசியில் வாகனப் பதிவெண் கண்டறியும் தானியங்கி கேமராவின் இயக்கத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் போக்குவரத்தும் தென்காசியின் முக்கிய பகுதிகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் எந்த ஒரு குற்றச் செயல்கள் நடைபெற்றாலும் குற்றச்செயலில் ஈடுபட்ட வாகனத்தை CCTV மூலம் கண்டறிந்தாலும் அதன் பதிவெண்ணை தெளிவாக அறிய முடிவதில்லை எனவே தென்காசி திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள சிக்னலில் சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை தானாகவே கண்டறியும் (Automatic Numbet Plate Recognition-ANPR) கேமரா,தூரத்தில் இருந்தே வாகன ஓட்டிகள் விழிப்படையும் விதமாக குத்துக்கல் வலசை ரவுண்டானா,தென்காசி ஆயிரப்பேரி சாலை ஆகிய பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் மற்றும் தென்காசி முக்கிய சாலைகளில் சிக்னல்கள் போன்றவற்றை தென்காசி போக்குவரத்து காவல் துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது அதன் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் துவங்கி வைத்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன்,உதவி காவல் கண்காணிப்பாளர்(பயிற்சி) திரு.கிரிஷ் யாதவ் IPS, காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்..