சென்னை: பொதுமக்களுக்கு வங்கிகளிலிருந்து வருவது போல , ஒரு குறுஞ்செய்தி ( SMS ) வருகிறது . அதில் – Dear Bank User Your – Bank account has been blocked . Please update your KYC / PAN Card / Aadhaar Card Details . Click here to Login your Net Banking update your KYC / PAN number | Aadhar Card Details http://6328633cafe.ngrok.io/bank ” என்று வருகிறது . பொதுமக்கள் இதனை உண்மையென்று நம்பி , ஆராயாமல் மேற்படி லிங்க் – ஐ கிளிக் செய்து விடுகின்றனர் . லிங்க் – ஐ கிளிக் செய்தவுடன் பத்து நிமிடத்திற்குள் ஆன்லைன் மூலமாக , பணப்பரிவர்த்தனை , பொருட்களை வாங்குவது , ATM- ல் பணம் எடுப்பது ஆகியவை நடைபெறுகின்றன . இதனால் பலர் பாதிக்கப்பட்டு புகார் அளித்து வருகின்றனர் .
இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து வங்கியிலிருந்து வருவது போல லிங்க் எதுவும் மொபைல் போனுக்கு வந்தால் , கிளிக் செய்வதை அறவே தவிர்க்கவும் ,
நீங்கள் சில நிமிடங்களில் , ஏதோ ஒரு வேலையை செய்யவில்லை என்றால் உங்களது கணக்கு முடக்கப்படும் என்று வருகின்ற செய்திகளை நம்ப வேண்டாம் .
சந்தேகம் வந்தால் உங்கள் வங்கிக்கு சென்று விசாரிக்கவும் என்று சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் .