இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. காமினி இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தலைமை காவலர் திரு .தண்டாயுதபாணி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் இவ்விழாவில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. திவ்யதர்ஷினி இ.ஆ. ப., அவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெயச்சந்திரன் அவர்கள், சார் ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்கள், ஆயுதப்படை காவலர் திரு. அருள் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி. கீதா இராணிப்பேட்டை, திரு. மனோகரன் அரக்கோணம், திரு. சுரேஷ் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, திரு. விநாயகம் ஆயுதப்படை, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்